24 மனைவி, 149 குழந்தைகள்: சிறையில் அடைக்கப்பட்ட 'பலே' கிறிஸ்தவ போதகர்!

  Padmapriya   | Last Modified : 28 Jun, 2018 02:52 pm

canadian-man-with-24-wives-149-kids-sentenced-to-house-arrest

கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்துகொண்டு 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்தவ மத போதகரை வீட்டுக்காவலில் சிறைபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடா நாட்டில் ஒன்றுக்கும் பலதார மணம் தடை செய்யப்பட்டள்ளது. இதை மீறி திருமணம் செய்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், சட்டத்தை மீறி ஒன்று இரண்டு பேர் இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்வது உண்டு. அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவதும் உண்டு. ஆனால், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 24 பெண்களை திருமணம் செய்திருப்பது தற்போது வெளியாகி உள்ளது. 

கனடாவில்  வின்ஸ்டென்ட் பிளாக்மோர் கிறிஸ்தவ அமைப்பு உள்ளது. இதன் தலைவராக இருப்பவர் 61 வயது வின்ஸ்டன் ப்ளாக்மூர். கிறிஸ்தவ பணியாற்றுகிறேன் என்று தன்னை ஒரு மதப் பிரிவின் தலைவராக அறிவித்துக்கொண்ட அவர், 24 பெண்களை மயக்கி திருமணம் செய்துள்ளார். இதன்மூலம், அவருக்கு 149 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், யாரும் புகார் செய்யவில்லை என்று கூறி கனடா அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்தநிலையில், அவர் இன்னும் திருமணம் செய்ய தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை நடத்திய கனடா அரசு, வின்ஸ்டன் ப்ளாக்மூரை கைது செய்துள்ளது. 

விசாரணையில், இவர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளத. அவர் திருமணம் செய்தவர்களில் பலர் 15 வயதுக்கு கீழான சிறுமிகள்.

பலதார திருமணம் சட்டத்தின் கீழ் இவர் மீது பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாக்மோர் மொத்தம் 29 திருமணம் செய்து, 160-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல ஜேம்ஸ்ஒலர் என்பவர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவரை 3 மாதம் வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. வின்ஸ்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கனடா சட்டம் சொல்கிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.