பிரதமர் மோடியை புகழ்ந்த கனடாவின் முன்னாள் பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 04:25 pm
former-canada-pm-stephen-harper-s-tweet-about-pm-modi

இந்தியாவிற்கு வருகை தந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ஃபர் மரியாதை நிமித்தமாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நட்புறவு குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பிற்கு பின்னர் ஸ்டீபன் ஹார்ஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் பதிவில், "இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை உள்ள தலைவர்களில் குறிப்பிடதக்கவர் பிரதமர் மோடி. எனது சிறந்த நண்பர். உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு உரையாடலையும் நெறிப்படுத்துபவர். இந்தியா, தனது ஆற்றலை உணர, பிரதமர் மோடி போன்ற ஒரு தைரியமான, தொலைநோக்கு பார்வையுள்ள தலைவர் தேவை. அவருடன் நிற்பதில் பெருமைகொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close