பூமியை தாக்க வருகிறது சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம்

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 07:00 am


விண்வெளியில் சீனா நிறுவி உள்ள விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று வரும் மார்ச் மாத இறுதியில் பூமியின் மீது விழ உள்ளது.

அமெரிக்காவின் நாசாவை தொடர்ந்து தனக்கான தனி விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்ட சீனா, அதற்கான பணிகளை கடந்த 2011-ம் ஆண்டு துவங்கியது. ஆய்வு நிலையத்தின் பகுதிகளை தனித்தனியாக விண்ணில் செலுத்தி 2022-ம் ஆண்டிற்குள் முழுமையான ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்க வேண்டும் என்பது சீனாவின் இலக்காக இருந்தது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு 'Tiangong-1' எனும் முதல் விண்வெளி ஆய்வு நிலைய பகுதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 8.5 டன் எடையுள்ள இது சொர்க்க மாளிகை என அழைக்கப்பட்டது. 

2013-ம் ஆண்டு கடைசியாக இந்த ஆய்வு நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 2016-ம் ஆண்டு  'Tiangong-2' எனும் இரண்டாவது பகுதி விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டப்படி  'Tiangong-2'-வை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும்  'Tiangong-1'-ஐ மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால்  'Tiangong-2'-வை வெற்றிகரமாக வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனால் என்ன செய்வது என்பதற்காக  'Tiangong-1'-ஐ விண்ணில் இருந்து பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆனால் 2016 மார்ச் 16-ம் தேதி  'Tiangong-1' விண்ணில் தன் செயல்பாட்டை நிறுத்தியது. ஐ.நா-வில் கடந்த ஆண்டு மே மாதம் இதனை தெரிவித்த சீனா, அதற்கான காரணத்தை கூறவில்லை.

டிசம்பர் 24-ம் தேதி நிலவரப்படி  'Tiangong-1' பூமியில் இருந்து 286.5 கி.மீ தொலைவில் இருந்தது. இந்த நிலையில் வரும் மார்ச் மாத இறுதியில்  'Tiangong-1' பூமி மீது விழ போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் செயல்பாட்டை இழந்த  'Tiangong-1' சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தன்னிச்சையாக பூமியை சுற்றி வந்தது. தற்போது அது பூமியின் மீது விழ உள்ளது. ஆனால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும் போது காற்றின் அழுத்தம் காரணமாக  'Tiangong-1'-ன் பெரும்பான்மையான பகுதி எரிந்து விடும் என்றும், சில பகுதிகள் நிலத்திலோ அல்லது கடலிலோ விழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மோசமாக இருப்பதன் காரணமாக ஆய்வு நிலையம் எங்கு, எப்போது விழும் என்பதை கணிக்க முடியவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close