இந்திய, சீன எல்லைப்பகுதிகளை பாதுகாக்க நேபாளம் புதிய திட்டம்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 11:22 am
nepal-plans-separate-agency-for-securing-borders-with-india-china

இந்தியா, சீனாவுடனான எல்லைப்பகுதிகளை பாதுகாக்க தனி அமைப்பு ஒன்றைத் தொடங்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தியா, சீனா நாட்டின் பகுதிகளை நேபாளம் எல்லையாக கொண்டுள்ளது. சிக்கிம் எல்லையான டோக்லாம் பகுதியில் சீனா எல்லைமீறி நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் இந்திய - சீன நாடுகளுக்கு இடையே போர் சூளும் அபாயம் கூட நிலவியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூகமாக முடிவடைந்த நிலையில், இந்தியாவுடன் நட்பு நாடான நேபாளம் தற்போது சீனாவுடனும் பரஸ்பர உறவை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா, சீனா ஆகிய இருநாட்டுடன் நட்புறவை சரிசமமாக கொண்டு செல்லவும், இரு நாட்டுடனான தங்கள் நாட்டின் எல்லைகளை கண்காணிக்கவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின்  உள்துறை அமைச்சர் ராம் பகதூ தாபா கூறியதாவது,   "தற்போது நேபாளத்தில் உள்ள பாதுகாப்புப்படை அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க போதுமானதாக இல்லை. நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எனவே எனவே பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நட்புறவை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த அமைப்பினை நேபாள அரசு நிறுவியுள்ளது" என தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close