சோளம் திண்ற அணில்: கட்டிவைத்து அடித்த சீன விவசாயி கைது!

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 03:35 pm
squirrel-tied-to-a-beer-bottle-whipped-by-chinese-farmer

சீனாவில் சோளத்தை அணில் திண்றதற்காக அதனை கட்டி வைத்து அடித்தவர் கைது செய்யப்பட்டார்.

தென்மேற்கு சீனாவின் க்விசவ் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இதனை அணில் ஒன்று அவ்வப்போது எடுத்து கொறித்து வந்தது. இதனை கவனித்து வந்த அந்த விவசாயியால் அணிலை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயி, பொறி வைத்து அணிலைப் பிடித்தார். பின்னர் அதனை ஒரு மது பாட்டிலில் கயிறு கொண்டு கட்டி, பின்னர் குச்சியால் அதனை அடிப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 

எச்சரிக்கை... இளகிய மனம் கொண்டவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்!

அணிலை அடிக்கும் அந்த விவாசாயி, "எனது மக்காச்சோளத்தை ஏன் வந்து சாப்பிட்டாய். எனது சகோதரர்கள் தோட்டத்தில் சென்று சாப்பிட வேண்டியது தானே. அவனிடம் நிறைய இருக்கிறது. என்னிடம் குறைவாகத்தானே இருக்கிறது. என்னிடம் திருடுகிறாயே நீ நல்லவன் இல்லை" என்று கூறிக் கொண்டே தாக்கினார். வேகமாக பகிரப்பட்ட இந்த வீடியோ பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இனி, இவ்வாறு சாப்பிடுவாயா? என்று கேட்டு மீண்டும் மீண்டும் கைதியை போல் அணில் சித்தரவதைக்குள்ளாவது குறித்து பல புகார்கள் எழுந்த நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய விவசாயியை சீன போலீசார் கைது செய்தனர். அடி வாங்கிய அணில் உயிரோடு உள்ளதா, அதை அந்த விவசாயி கொன்றுவிட்டாரா என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close