சீனாவில் கொளுத்தும் வெயில்: கார் கண்ணாடியில் மீன் வறுக்கும் பெண்

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 09:22 am

china-woman-cooks-fish-on-the-hood-of-the-car

சீனாவில் கொளுத்தும் வெயிலில் கார் கண்ணாடி மேல் நெருப்பில்லாமல் மீன் வறுக்கும் பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வருடாவருடம் பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே இருகிறது. இதனால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. புவி வெப்பமடைதலை தடுக்க உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெயில் காலங்களில் வெப்பத்தின் அளவு கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகம் தான் என்ற நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இந்த பிரச்னையை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தற்போது சீனாவை சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்று வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் காரின் முன் பக்க கண்ணாடியில் மீனை வைத்து வறுத்துக்கொண்டு இருக்கிறார். நெருப்பில்லாம் மீன் வறுக்கும் அந்த பெண் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக குடையை பிடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீனாவின் பின்ஷோவ் பகுதியில் எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் வெப்பத்தின் அளவு 40 டிகிரியையும் தாண்டியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close