காரில் பாய்ந்து, கத்தியால் குத்தி கொடூரத் தாக்குதல்: சீனாவில் 9 பேர் பலி! 

  Padmapriya   | Last Modified : 13 Sep, 2018 08:50 am

9-killed-46-hurt-in-china-as-man-goes-on-stabbing-spree-after-ramming-car-into-crowd

சீனாவில் கூட்ட நெரிசலான பகுதியில் திடீரென புகுந்த கார் மக்கள் மீது பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியது, அதோடு அதனை ஓட்டி வந்த நபர் கிழே இறங்கி கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியதில் 9 பேர் பலியாகினர். 

சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் ஹென்க்டாங் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள நதிக்கரையில் மாலை நேரத்தில் மக்கள் கூடி இளைப்பாறி செல்வர். இந்த நிலையில் நேற்று மாலைப் பொழுதில் மக்கள் கூடி இருந்த நேரத்தில் திடீரென ஒறு சொகுசு கார் அதிவேகத்தில் பாய்ந்தது.  செய்வது அறியாது இருந்த மக்கள் பலரும் படுகாயமடைந்தனர். 

அப்போது பரபரப்பாக காரிலிருந்து இறங்கிய நபர் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இந்த கொடூர சம்பவத்தில் 3 பேர் அதே இடத்தில் இறந்தனர். பின் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் மருத்துவமனையில் பலியாகினர். 

43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து சென்றனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (வயது 54) என்றும், பல்வேறு குற்றவழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் வெறுப்புணர்வு போன்றவற்றால் இது போல கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்படுவது முதல்முறை அல்ல. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.