சீனாவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் அதிர்ந்தன

  Padmapriya   | Last Modified : 17 Oct, 2018 11:48 am
5-4-magnitude-quake-hits-northwest-china

சீனாவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் அங்கு பல்வேறு நகரங்களில் வீடுகள் ஆட்டம் கண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சீனாவின்

வடமேற்குப் பகுதியான ஜிங்கே கவுண்டியில் இன்று காலை அந்நாட்டு நேரப்படி 10.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகி இருந்ததாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஜிங்கே கவுண்டி பகுதியில் 50 கிலோ மீட்டருக்குள்ளாக பல்வேறு நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலநடுக்கத்தல் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டின் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். சின்ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்காகவும் மீட்பு நடடிக்கைக்காகவும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close