சீனா: மழலையர் பள்ளியில் கத்திக்குத்து - 14 குழந்தைகள் படுகாயம்

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 08:05 pm
woman-with-knife-injures-14-children-at-western-china-school

சீனாவில் மழலையர் பள்ளி வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர், குழந்தைகளை கத்தியால் தாக்கியதில் 14 குழந்தைகள் படுகாயமடைந்தனர். 

சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு வந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளார். 

இதனால் குழந்தைகளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடியத் தொடங்கியது. வெறித்தனமாக குழந்தைகளை தாக்குவதைப் பார்த்த பாதுகாவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து  போலீசில் ஒப்படைத்தனர். 

இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த 14 குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
தாக்குதல் நடத்திய பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பள்ளிக்கு வந்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக சமுக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவி வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close