ஓட்டுநர்-பயணி வாக்குவாதத்தால் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 07:31 pm
woman-fought-with-driver-causing-bus-to-fall-in-china-river

சீனாவில் ஓட்டுநரிடம் வாக்குவாதம் நடத்திய பயணியால், பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தென் மேற்கு சீனாவின் சோங்குயிங் (Chongqing) மாகாணத்தில் உள்ள யங்ட்ஜீ (Yangtze) நதியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது பேருந்து விபத்துக்கான காரணம் கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து பேருந்தில் சிக்கிய பயணிகளின் உடல்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துகான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லியூ எனும் 48 வயது பெண் ஒருவர், தமக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்க மறந்துவிட்டார். நிறுத்தம் கடந்ததும் நினைவுக்கு வந்ததால், ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கவனத்தை வாக்குவாதத்தில் செலுத்திய ஓட்டுநர், பேருந்தின் ஓட்டத்தைக் கண்காணிக்கத் தவறியதால், பாலத்தின் தடுப்பை இடித்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்தது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close