சீனாவில்: கட்டுப்பாட்டை இழந்த லாரி: 14 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 04 Nov, 2018 11:23 am
at-least-14-dead-in-nw-china-pile-up

சீனாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்வந்த கார்களின் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து நேரிட்டது. 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close