ராணுவ கூட்டணியை பலப்படுத்த சீனா - பாகிஸ்தான் உறுதி

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 06:01 am
china-to-boost-military-ties-with-pakistan

சீனா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தலைவர்களுடன் நடத்திய உச்சகட்ட பேச்சுவர்த்தைக்கு பின், ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் கூட்டணியையும் மேம்படுத்த உறுதியளிக்கப்பட்டது.

ஷாங்காயில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்து உச்சகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார் கான்.

அதில், ராணுவம், பாதுகாப்பு , தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியை மேலும் வலுப்படுத்த உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து பல உயர்மட்ட சந்திப்புகளின் மூலம், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில், பேச்சுவர்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் எடுத்து வரும் முயர்சிகளுக்கும் சீன அரசு தனது பாராட்டுக்களை தெரிவித்தது.

இந்த சந்திப்பில், சீனாவும் பாகிஸ்தானும் பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பாக (CPEC) , பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு எதிர்ப்பு கிளம்பி வருவதாக சீனா தெரிவித்தது. இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close