24 மணி நேரமும் அயர்வின்றி செய்தி வாசிக்கும் ரோபோ சீனாவில் அறிமுகம் 

  Padmapriya   | Last Modified : 10 Nov, 2018 10:31 am
the-world-s-first-a-i-news-anchor-has-gone-live-in-china

உலகிலேயே முதன்முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திகள் வாசிக்கும் ஏஐ ரோபாக்களை சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கியுள்ளது.  இந்த ஏஐ ரோபோக்கள், ஓடும் திரையில் நகரும் எழுத்துகளைப் படிக்கும். அந்த செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசைவையும் தத்ரூபமாக அளிக்கும். 

இவற்றை ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் தனித்தனியாக வாசிக்க இரண்டு ஏஐ ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேடுபொறி மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

''இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும்'' என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நவ.7 அன்று சீனாவில் நடந்த உலக இணைய மாநாட்டில் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

 

 

 

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய அளவில் முதலிடத்தில் சீனா உள்ளது. ஆனால் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டர் சிப்களுக்கு ட்ரம்ப் அரசு முட்டுக்கட்டை போட்டது நினைவிருக்கலாம். 

முன்னதாக, அமெரிக்கத் தொழில்நுட்பங்களைச் சீனா திருடுவதாக ட்ரம்ப் அரசு குற்றம்சாட்டியும் இருந்தது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close