சீனாவில் கடுமையான பனிப்பொழிவு!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:11 am
beijing-endures-one-of-coldest-december-days-on-record

சீனாவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. சீனாவின் வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களில் புதன் கிழமை முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பசுமை மறைத்து, வெண்பனி போர்த்தியது போன்ற காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. ஓடும் நதியில் சூரிய ஒளி பட்டு, புகைபோல் அது ஆவியாகும் அழகிய காட்சிகளும் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.

சாலையில் பனி படர்ந்துள்ளதால் விபத்துக்கள் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலையில் மண்ணைத் தூவிய போக்குவரத்து போலீசார், குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close