போருக்கு தயாராக இருங்கள் - சீன ராணுவத்துக்கு அதிபர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:19 pm
china-president-ordered-army-to-be-ready-for-war

எதிர்தாக்குதல் திறனை அதிகரிப்பதில் சீன ராணுவம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தைவான் நாடு சீனாவுடன் இணைய வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜின்பிங் எச்சரிக்கை விடுத்து இரண்டே நாட்களில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

ஜின்பிங்கின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மத்திய ராணுவ ஆணையத்தில் அவர் நேற்று உரையாற்றினார். அப்போது, உத்திசார் நடவடிக்கைகள், தந்திரங்களை வகுப்பது, அவசரகாலங்களில் போர் புரிவது போன்றவைகளை வீரர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜின்பிங் வலியுறுத்தினார். சீன ராணுவ வீரர்களுக்கு பயிற்சிகளை மேம்படுத்துவது, ஒத்திகைகள் நடத்துவது, வீரர்களின் பயிற்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

முன்னதாக, ‘ஒரே நாடு; இரண்டு அரச அமைப்புகள்’ என்ற கொள்கையை தைவான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜின்பிங் கூறியிருந்தார். தைவானுக்கு பின்னால் இருக்கும் வெளிநாட்டு சக்திகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்டோருக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தருந்தார்.

அதே சமயம், சீனாவை இலக்காக வைத்து ஏவுகணைகளை சோதனையிடுவது போன்ற வீடியோக்களை தைவான் கடற்படை கடந்த வாரம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. மன்னராட்சி காலத்தில் சீன மன்னர்களால் தைவான் ஆட்சி செய்யப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு தைவான் சீனாவுடன் இணைய வேண்டும் என 1950ம் ஆண்டில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close