குறையும் ஜனத்தொகையால் சீனாவுக்கு ஆபத்து!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 09:54 pm
china-s-population-2-peak-at-144-crores-in-2029

சீனாவில் 2029ம் ஆண்டு, ஜனத்தொகை உச்சக்கட்டமாக 144.2 கோடியை எட்டி, அதன்பிறகு குறையத் துவங்கும் என்று கூறியுள்ள நிபுணர்கள், இதனால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடான சீனாவில், சமீபத்திய கணக்கெடுப்பின்படி 138.6 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முக்கியமாக ஒரு குழந்தை திட்டம் நாட்டில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்து, சமீபத்தில் திரும்பபெறப்பட்டது. சீனாவின் ஜனத்தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், 2029ம் ஆண்டில், அதிகபட்சமாக 144.2 கோடியுடன், சீன ஜனத்தொகை உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, 2030ல் இருந்து, நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஜனத்தொகை குறைந்துகொண்டே செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் உழைக்கும் மக்களின் ஜனத்தொகை குறைந்து மூத்த குடிமக்கள் அதிகமாக வாழும் காலம் விரைவில் வரும் என்றும், அப்போது சீனா பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பு அடையும் என கூறப்பட்டுள்ளது. "நீண்ட கால கணக்கீட்டின் படி, ஜனத்தொகை குறைந்தால், அதுவும் வயதானவர்களின் ஜனத்தொகை அதிகரிக்க; ஒரு பக்கம் ஜனத்தொகை வளர்ச்சி குறைந்து வந்தால், அதனால் பல்வேறு பொருளாதார ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என சீனாவின் சமூக ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டிற்கு முன்னர், சீனாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையில் 20 கோடி குறையும் என கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close