சீனாவில் கிம் ஜாங் உன்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:08 pm
north-korean-president-arrived-in-china-for-four-days-state-visit

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்று மதியம் சீனா வந்தடைந்த அவர், அங்கு நான்கு நாள்கள் தங்கியிருப்பார். கிம் ஜாங் உன்னுடன் அவரது மனைவி ரீ-சோல் ஜூவும் சென்றிருக்கிறார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து கிம் ஜான் உங் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அடுத்த சில நாள்களில் அமெரிக்க அதிபர் டிரம்பை வடகொரிய அதிபர் இரண்டாம் முறையாக சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், சீன அதிபருடன் தற்போது அவர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வடகொரிய அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள், ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கிம் ஜான் உங்குடன் சீனா சென்றுள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டில் வட கொரிய அதிபர் மூன்று முறை சீனாவுக்கு வந்து ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கிம் ஜான் உன்னின் தற்போதைய பயணம் முடிவடைந்த பின்னர், சீன அதிபர் ஷி ஜின்பிங் வடகொரியா செல்லவுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close