ப்ரம்மோஸுக்கு இணையான ஏவுகணையை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:58 am
china-to-give-pakistan-brahmos-like-anti-ship-missile

பாகிஸ்தான் நாட்டு கடற்படைக்கு, சீனா அதிநவீன CM-302 என்ற ஏவுகணையை வழங்க ஒப்புக் கொண்ட, நிலையில் இந்தியாவின் ப்ரம்மோஸ் ஏவுகணைக்கு இணையான ஏவுகணையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு கடற்படைக்காக, சீனா நவீன போர்க்கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இந்தப் போர்க் கப்பல்களில், முக்கியமாக CM-302 என்ற ஏவுகணைகளை சீனா பொறுத்த உள்ளது. இந்த CM-302 ஏவுகணைகள், ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை, வேகத்திலும், இலக்கை தாக்கும் தூரத்திலும் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு நவீன ஆயுதம் சீனா மூலமாக கிடைப்பது, இந்திய தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை சார்பில், "இந்த ஏவுகணைகள் இருந்தால் மட்டும் இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானால் பெரிய ஆபத்து ஏற்படாது. இதை சிறந்த முறையில் பயன்படுத்த பல்வேறு விஷயங்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. தொழிநுட்ப ரீதியாக பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இன்னும் அந்த அளவுக்கு நவீனப் படுத்தப்படவில்லை," எனக் கூறியுள்ளார். 2021ம் ஆண்டு முதல் இந்த புதிய ஏவுகணைகளை கொண்ட போர்க்கப்பல்கள், பாகிஸ்தான் கடற்படையின் பயன்பாட்டுக்கு வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close