சீனா சுரங்க விபத்து: 21 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:51 pm
china-coal-mine-collapse-21-dead

சீனாவின் ஷாங்க்ஜி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில், 21 பேர் பலியாகியுள்ளனர். 66 பேர் சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். 

சீனாவின் ஷாங்க்ஜி மாகாணத்தில் லிஜியகு என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. அங்கு, சுரங்க பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்து, பல சுரங்க பணியாளர்கள் சிக்கினர். சம்பவத்தின் போது, 87 பேர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், 66 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இடிபாடுகளில் இருந்து நேற்று 19 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவரின் உடல்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக சீனா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close