சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர வெடிவிபத்து! ஒருவர் பலி (வீடியோ)

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 09:13 pm
huge-blasts-in-china-high-rise-buildings

சீனாவின் சங்சுங் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் இன்று பயங்கர சத்தத்துடன் இரட்டை வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்றன. இதில், ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சீனாவின் சங்சுங் நகரில் உள்ள அடுக்குமாடி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் கார் நிறுத்தத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே கட்டிடத்தின் 30வது மாடியில் உள்ள ஒரு அலுவலக தளத்தில் மற்றொரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

கட்டிடத்திற்கு அருகே இருந்தவர்கள் 20க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, விசாரணை துவக்கியுள்ளதாக சீன போலீசார் தெரிவித்துள்ளானர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close