5ஜி சேவைகளை தொடங்கியது சீனா!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 08:33 pm
china-launches-5g-services

தொழில்நுட்ப வசதிகள் குறைவாக உள்ள சீனாவின் கிங்ஹாய் - திபெத் பகுதியில், 5ஜி சேவைகளை அந்நாட்டு அரசு துவக்கியுள்ளது. அங்குள்ள ஜீனிங் நகரில், புதிய 5ஜி தளத்தை அந்நாட்டு அரசு உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 5ஜி சேவைகளை, பொதுமக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசுகளும், தொழில்நுட்ப நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இதில் முதல் நாடாக தென் கொரியா 5ஜி சேவைகளை கடந்த ஆண்டு இறுதியில் துவக்கியது. இந்நிலையில், சீனா 5ஜி சேவையை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள கிங்ஹாய் - திபெத் மலைப்பகுதியில், 5ஜி சேவையை முதன்முதலாக கொண்டுவர உள்ளதாக சீன அரசு தெரிவித்தது. அந்த பகுதிக்கும், சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப இடைவேளையை, இந்த 5ஜி சேவையின் மூலம் குறைக்க முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. தற்போது அந்த நகரத்தின் முக்கிய பகுதியில் 5ஜி சேவைகள் துவக்கப்பட்டுள்ளன. இதில், 4ஜி விட 10 மடங்கு அதிக வேகமாக, 1.3 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் மூலம், விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் அந்த பகுதியில் பிரபலமடையும் என சீன அரசு சார்பில் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close