புல்வாமா தாக்குதல் சம்பவம்: தீவிரவாத அமைப்பின் தலைவனை கண்டிக்க சீனா மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 08:45 pm
pulwama-terror-attack-china-refuses-to-condemn-masood-azhar-of-jem

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமான அமைப்பின் தலைவனை கண்டிக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குள்பட்ட அவந்திபுராவில் நேற்று நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 38 பேர் உயிரிழந்தனர்.

உலகத்தையே உலுக்கியுள்ள இக்கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் சீனாவும் தமது கண்டனத்தை இன்று பதிவு செய்துள்ளது.

ஆனாலும், இத்தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது எனும் தீவிரவாத அமைப்பின் தலைவனான மௌலானா மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சீனா மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் இக்கோரிக்கைக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 

இதன் மூலம், பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ள பாகிஸ்தானுக்கு சீனா எவ்வாறு ஆதரவாக உள்ளதென்பதை அறிந்து உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close