ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பின்னடைவு... சமாளிக்கும் சீனா!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 03:50 am
china-tries-to-water-down-un-security-council-resolution

சீனாவின் தொடர் எதிர்ப்பையும் மீறி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தாக்குதலை பற்றி எந்தவொரு முடிவையும் குறிக்கவில்லை, என்று சீனா தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், 49 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தங்களுக்கும் அந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த அமைப்பு மறுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாத்தை ஐநாவில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து தடுத்து வருகிறது.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை குறிப்பிடாமல், சீனாவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐநாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எதிர்த்து வந்த சீனா, இறுதியில் வேறு வழியில்லாமல் தீர்மானத்திற்கு, ஆதரவளித்தது.

இருந்தாலும், தற்போது புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை இந்த தீர்மானம் முடிவாக குற்றம்சாட்டவில்லை என சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், "நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ஒரு அமைப்பு பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது இந்த தாக்குதல் குறித்த முடிவு அல்ல" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close