சீன அதிபர் ஜி-யை 'பூஹ்' கரடியாக கிண்டலடித்த கேம் மீது தடை!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 04:34 pm
china-bans-game-over-president-xi-and-winnie-the-pooh-comparison

சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை 'வின்னி தி பூஹ்' என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்த வீடியோ கேம் வைரலானதை தொடர்ந்து, சீன அரசு அதை தடை செய்துள்ளது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க குழந்தைகள் கார்ட்டூனான  'வின்னி தி பூஹ்' என்ற கரடி கதாபாத்திரத்தை போல இருப்பதாக  கடந்த சில வருடங்களில் சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து, சீன இணையத்தில், ஜி-யை 'பூஹ்' என கிண்டலடிக்கும் அனைத்து பதிவுகளும் தடை செய்யப்பட்டன. 

இந்நிலையில், தைவான் நாட்டினர் உருவாக்கிய 'டிவோஷன்' என்ற வீடியோ கேம், சமீபத்தில் வைரலாகி வந்தது. சீனாவிலும் இந்த கேமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நேரடியாக அதிபர் ஜி-யை கிண்டலடிக்காமல், பல குறியீடுகள் மூலம் பூஹ்-வையும் ஜி-யையும் இந்த கேமின் தயாரிப்பாளர்கள் ஒப்பிட்டு கேலி செய்துள்ளனர். கேம் விளையாடிய பலர் இதை தெரிந்து கொள்ள, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, விவாதப் பொருளாக்கினர். உடனடியாக சீன இணைய தணிக்கை அதிகாரிகள், சமூக வலைதளங்களில் இதுபோன்ற விவாதங்களையும், அந்த கேமையும் ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close