சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 08:53 am
external-affairs-minister-sushma-swaraj-meets-her-chinese-counterpart-wang-yi-in-wuzhen

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமானப்படை நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா சென்றுள்ளார். 16வது இந்தியா - சீனா - ரஷ்யா வெளியுறவுத்துறை சந்திப்பில் கலந்து கொள்ள அவர் சீனா சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார். சீனாவில் வாங் யீயை, சுஷ்மா சுவராஜ் சந்தித்தார் .

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சீனாவிடம் இந்திய தரப்பு பேச முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இதுகுறித்து விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ரஷ்யாவிடமும் இந்தியா இதுகுறித்து முறையிட முடிவெடுத்துள்ளது  என தகவல்கள் தெரிவிக்கின்றன 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close