பெண்ணின் ‘பேங்க் பேலன்ஸ்’ பார்த்த பிறகு பணத்தை திருப்பிக் கொடுத்த கொள்ளையன்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 12:15 pm
chinese-thief-returned-money-to-women-after-checked-her-balance

சீனாவில் ஏ.டி.எம். அறையில் புகுந்து பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்த இளைஞர், பின்னர் அவரது பேங்க் பேல்ன்ஸ் தொகையை பார்த்த பிறகு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஹூவான் நகரில் உள்ள ஐ.சி.பி.சி. வங்கியின் ஏ.டி.எம். அறையில் சென்று, பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 2,500 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,000) பணம் எடுத்தார். அந்த சமயத்தில் திடீரென கத்தியுடன் நுழைந்த கொள்ளையன் ஒருவர், அந்தப் பெண்ணை மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டார். அந்தப் பெண்ணிடம் மேலும் பணம் பறிக்கும் நோக்கில், அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை ஏ.டி.எம். மூலமாக ஆய்வு செய்தார் அந்த கொள்ளையர். அப்போது, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் மேற்கொண்டு பணம் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, மெல்லிய புன்னகையுடன் பணத்தை திருப்பிக் கொடுத்தார் அந்தக் கொள்ளையர்.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்க...

இந்த சிசிடிவி பதிவு இணையதளங்களில் வைரலானது. சிலர் கொள்ளையரை பாராட்டவும், விமர்சிக்கவும் செய்தார்கள். என்னுடைய பேங்க் பேல்ன்ஸ் என்னவென்று பார்த்திருந்தால், கொள்ளையன் அவரது சொந்தப் பணத்தை கொடுத்துவிட்டு சென்றிருப்பார் என்று இளைஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதே சமயம், கொள்ளையரின் கருணைக் குணம் அவரை, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப வைக்கவில்லை. காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close