நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை!

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 06:49 pm
china-successfully-tests-world-s-1st-armed-amphibious-drone-boat

உலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து சாதனை செய்துள்ளது.

சீனாவின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வுசாங்க் கப்பல் கட்டும் நிறுவனத்தின் சார்பாக நிலம் மற்றும் நீரில் செல்லும் ஆயுதம் ஏந்திய தாக்குதல் ரக படகு தயாரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய வகையிலான இந்த படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்ட இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளன. செயற்கைகோள் மூலமும் இந்த படகை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் அதிகபட்டசமாக ஆயிரத்து 200கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close