கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 04:04 pm
china-twin-sisters-look-like-they-re-boxing-in-the-womb-during-ultrasound

தாயின் கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கின்றது.  

சீனாவை சேர்ந்த தாவோ என்பவா் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்தாண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த பெண்ணை மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்தனா். அப்போது  வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. இதை பார்த்து குழந்தைகளின் பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனர்.

இதை வீடியேவாக பதிவு செய்து இணையதளத்தில் அவா்கள் வெளியிட்டனர். இந்த காட்சியை கண்டு இணையதள வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சியானது தற்போது 25 லட்சம் லைக்ஸ் மற்றும் 80 ஆயிரம் கருத்துக்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டது. அந்த பெண் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி மற்றும் ஸ்டிராபெரி என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close