சீனா- ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 24 May, 2019 12:32 pm
boat-capsizes-on-southwest-china-river-10-dead

சீனாவில் பயணிகள் சென்ற ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் குயிசோ மாகாணத்தில் உள்ள பன்ரவ் என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் 20 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறிய படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 20 பயணிகளும் ஆற்றில் மூழ்கினர்.

உடனடியாக இது குறித்த பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு  குழுவினர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 10 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடுதம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close