சீனாவில் கனமழைக்கு 61 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jun, 2019 01:44 pm
china-flood-death-toll-hits-61-350-000-evacuated-ministry

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 

தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெருமளவு விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பீஜியாங் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.  

குவாங்டங் மாகாணத்தில், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் அவர்களை தங்க வைத்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close