சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 12 பேர் பலி- 125 பேர் காயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Jun, 2019 10:25 am
6-0-magnitude-earthquake-hits-china-s-sichuan-province-12-killed-125-injured

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 125க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் உள்ள வைபின் நகரில்  அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று  இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து, அலறியடித்தபடி வீதிகளை நோக்கி ஓடி வந்தனர். சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளதாகவும், 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அண்டை மாநிலமான யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close