அலிபாபா நிறுவனர் ஐாக் மா ஓய்வு

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 12:14 pm
alibaba-founder-jack-ma-retired

இணைய தள வர்த்தக நிறுவனமான அலிபாபாவின்  நிறுவனர் ஐாக் மா தன் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

ஐாக் மா 1999 - ல் இணைய தள வர்த்தக நிறுனமான அலிபாபா – வை ஓர் சிறிய ஓர் அறைகொண்ட தொகுப்பு வீட்டில் இருந்தவாறு தோற்றுவித்தார். இன்று அந்த நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அபரிதமான வளர்ச்சியை இந்த நிறுவனம் அடைந்துள்ளது. சீனாவின் குறிப்பிடத்குந்த வர்த்தக நிறுவனமாகவும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மூதலீடுகளையும் அலிபாபா செய்துள்ளது. அலிபாபா முதலீடு செய்யாத பெறு இணையதளங்களே உலகில் கிடையாது எனக்கூறலாம். அந்த அளவிற்கு இணைய தள வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்குமாறு அலிபாபாவை ஜாக் மா உயர்த்தினார் என்றால் அது மிகையல்ல. 

தற்போது 55 வயதாகும் ஜாக் மா கடந்த ஆண்டு தன்  பதவி  ஓய்வு  குறித்து பேசும் போது, அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி, செவ்வாய்கிழமையான நேற்று அவர் பதவி ஓய்வு பெற்றார். 38.4 பில்லியன் சொத்து மதிப்புள்ள இவரே சீனாவின் மிகப்பெரிய பணக்காரராவார். அவர் தான் சம்பாதித்து வைத்துள்ள  சொத்துகளை  மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், கல்வி வளர்ச்சிக்கும் செலவிடப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜாக் மாவை மகிழ்விக்கவும், நன்றி கூறும் விதமாகவும், சீனாவின் ஹாங்ஷௌ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நேற்று அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல பிரபலமான வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு துறைகளின் நட்சத்திரங்களும்  பங்குபெற்று அவர் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 

அலிபாபாவின் புதிய தலைவராக அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் டானியல் சாங் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் 460 பில்லியன் அமெரிக்க  டாலராக உள்ளது. மேலும் இத்தகைய அந்த நிறுவனத்தின் அபிரிமித வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஐாக் மா - வின் கடின உழைப்பும், திறனுமே என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close