இந்தியாவின் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ள சீனா!!!

  அபிநயா   | Last Modified : 05 Nov, 2019 09:56 pm
will-try-to-resolve-india-s-outstanding-issues-china-on-rcep

தாய்லாந்தில் நடைபெற்ற பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் சிக்கல்களை விரைவில் தீர்க்க முயற்சிப்பதாக கூறியுள்ளது சீன அரசு.

மூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம், இந்தியாவின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இல்லை என்பதால் அதில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் சீனா மேற்கொள்ளும் மலிவான இறக்குமதிகள் தான் என்று கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து, "அடுத்த ஆண்டு கையெழுத்திடவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு, பிராந்திய பொருளாதார கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது வருத்தமளிப்பதால், இந்தியாவில் சீனாவினால் ஏற்படும் சிக்கலுகளுக்கு விரைவில் ஓர் தீர்மானம் எடுக்குப்படும் என்று உறுதியளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஜெங் ஷுவீங், இந்தியா விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முன்வைத்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close