ரஷ்யா விமான விபத்தில் 71 பேரும் பலி

  SRK   | Last Modified : 13 Feb, 2018 09:12 am

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பயணிகள் விமானம் எதிர்பாராமல் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 71 பேரும் பலியானதாக ரஷ்யா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

65 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் அதில் இருந்ததாகவும், இறந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்துக்கு கடும் பனிப்பொழிவு, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, விமானியின் தவறு போன்ற பல காரணங்களுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால், இது ஒரு தீவிரவாத தாக்குதல் அல்ல என்று மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

400 பேர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close