எல்லை மீறிய ரஷ்ய போர்க்கப்பல்; கடுப்பான பிரிட்டன்

  Shanthini   | Last Modified : 26 Dec, 2017 07:19 pm


பிரிட்டன் வடக்கு கடல் பகுதியில் பயணம் செய்த ரஷ்ய போர்க்கப்பலுக்கு அந்நாட்டு கடற்படை பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லையை மீறுவது மேலும், சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ரஷ்யா அட்மிரல் கோர்ஷ்கோவ் எனும் போர்க்கப்பல் ஒன்று பிரிட்டன் நாட்டின் வடக்கு கடல் வழியாக பயணித்துள்ளது. இந்த கப்பல் பிரிட்டன் கடற்பரப்பை நெருங்கி வந்து கொண்டிருப்பதை அந்நாட்டின் எச்.எம்.எஸ். சென். அல்பன்ஸ் எனும் போர்க்கப்பல்கள் கடந்த 23ம் தேதி முதல், கண்காணித்து வந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் போர்க்கப்பல் திரும்பிச்செல்ல பிரிட்டன் போர்க்கப்பல் அனுமதியளித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் அந்த கப்பலுக்கு பிரிட்டன் கடற்படை பாதுகாப்பு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து பேசிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கெவின் வில்லியம்சன், "விடுமுறை நாட்களில் பிரிட்டன் கடற்பரப்புக்கு அருகில் ரஷ்ய கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close