செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பு - 10 பேர் படுகாயம்

  Sujatha   | Last Modified : 28 Dec, 2017 07:26 am


ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மாலை குண்டு வெடித்தது. சம்பவத்தையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிர் பலி எதுவும் நடக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பைகளை சேகரித்து வைக்கும் இடத்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், மேலும் TNT வெடிப்பொருளின் 200g (7oz) என்ற அளவில் வெடிகுண்டுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close