உலகின் மிக விலை உயர்ந்த வோட்கா பாட்டில் திருட்டு

  Anish Anto   | Last Modified : 05 Jan, 2018 08:01 am


டென்மார்க் நாட்டில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து உலகின் மிக விலை உயர்ந்த வோட்கா பாட்டில் ஒன்று திருடு போயுள்ளது. 

டென்மார்க்கை சேர்ந்த பிரையன் இங்பெர்க் எனும் நபர் கஃபே 33 எனும் மதுபான விடுதியை நடத்தி வருகிறார். இவரது கடையில் பல்வேறு தரப்பட்ட வோட்கா பாட்டில்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் ரஷ்யாவை சேர்ந்த ரூஸ்ஸோ - ப்ளாட் எனும் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வோட்கா பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. 3கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாட்டிலின் மூடி வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதன் முன்பகுதியில் தோல் வேலைபாட்டுடன்  ரூஸ்ஸோ - ப்ளாட் கார்களில் இருக்கும் ரேடியேட்டர் கவசத்தின் படமும் இருக்கும்.

இந்த ஒரு பாட்டிலின் விலை 8.24 கோடி ரூபாயாகும். தங்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இதனை  ரூஸ்ஸோ - ப்ளாட் நிறுவனம் தயாரித்து இருந்தது. பின்னர், பிரையன் தனது கடையில் வைப்பதற்காக இதனை அந்நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார். கடந்த 6 மாத காலமாக அவரது கடையில் தான் இந்த பாட்டில் இருந்துள்ளது. 

கடந்த செவ்வாய் கிழமை இந்த கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன், கடையில் இருந்த வோட்கா பாட்டிலை திருடி சென்றுள்ளான். மேலும், வோட்கா பாட்டிலை தவிர கடையில் இருந்த வேறு எதையும் திருடன் எடுத்து செல்லவில்லை. இது குறித்து பிரையன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் கதவு மற்றும் ஜன்னல் எதுவும் உடைக்கப்படவில்லை எனவே திருடன் கடைக்குள் எவ்வாறு நுழைந்தான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் எனும் ஆங்கில தொடரில் இந்த வோட்கா பாட்டில் இடம் பெற்றிருந்தது கூடுதல் தகவல்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close