பத்திரிகையாளர்களை விடுவித்தது துருக்கி நீதிமன்றம்; அரசு ஷாக்!

  SRK   | Last Modified : 12 Jan, 2018 09:31 am


துருக்கி அரசு கைது செய்த 2 பத்திரிகையாளர்களை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக அரசு மீது நீதிமன்றம் குற்றம்சாட்டியது.

2016ம் ஆண்டு, துருக்கி அதிபர் எர்டோகனை பதவியில் இருந்து தூக்கி எரிய சதி நடந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பிறகு, அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டனர். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரே அடியில் வீழ்த்த அதிபர் எர்டோகன் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

இந்த சம்பவத்தின்போது, 145 பத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது துருக்கி அரசு. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. அவர்களை விடுவிக்க அனைத்து தரப்பில் இருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில், அவர்களில் மெஹ்மத் அல்டான், சஹின் அல்பே ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களை கைது செய்த விதத்தில் அவர்களது அடிப்படை உரிமைகளை அரசு மீறியுள்ளது என சுட்டிக் காட்டிய நீதிமன்றம், அவர்கள் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மற்ற பத்திரிகையாளர்களை விடுவிக்க உதவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close