ஸ்விஸ் அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி

  SRK   | Last Modified : 23 Jan, 2018 08:52 am


உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அலைன் பெர்செட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இரு நாட்டு உறவுகள் குறித்தும், ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை குறித்தும் பிரதமர் மோடி விவாதித்ததாக தெரிகிறது.

60 பெரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, சர்வதேச மாநாட்டிலும் உரையாற்றுகிறார்.

 2016ம் ஆண்டுக்கு பிறகு, பிரதமர் மோடி ஸ்விட்சர்லாந்துக்கு செல்வது இது இரண்டாவது முறை. நாடு திரும்பும் முன், ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டெபான் லோஃபென்னையும்  மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close