நிரம்பி வழியும் ஆறு; வெள்ளக்காடானது பாரிஸ் நகரம்

  SRK   | Last Modified : 30 Jan, 2018 06:39 pm


பாரிஸ் நகரின் நடுவே செல்லும் சைன் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாரீஸ் நகரின் பல பாகங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சைன் ஆற்றின் நீர்மட்டம் 5.85 மீட்டர் உயர்ந்துள்ளது. இதனால், பாரிஸ் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரில் உள்ள சுமார் 1500 பேர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல அன்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. பாரிஸ் நகரில் பல மக்கள் வாழும் படகு வீடுகள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை குறைந்துள்ளதால், தண்ணீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close