ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு; 55 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 02 Mar, 2018 11:56 am


ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவில் சிக்கி இதுவரை 55 பேர் வரையில் பலியாகியுள்ளனர். 

ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு நிகழ்வதால் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் அந்நகரங்களில் விமான சேவை, ரயில் சேவை என அனைத்து போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வரமுடியாத சூழல் நிலவுகிறது. குழந்தைகள், உடல்நலம் குன்றிய முதியோர்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்த பனிபொழிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ், செர்பியா, ஸ்லோவாகியா, ஸ்பெயின் உள்ளிட்ட நகரங்களில் அதிகமான பனிப்பொழிவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நாட்களுக்கு பிறகு வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close