ரஷ்ய அரசே உளவாளியை கொலை செய்திருக்கலாம்: பிரிட்டன் பிரதமர்

  SRK   | Last Modified : 13 Mar, 2018 10:51 am


ரஷ்ய நாட்டின் முன்னாள் உளவாளி  ஒருவரும் அவரது மகளும், லண்டனில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை கொலை செய்ய ரஷ்ய அரசு முயற்சி செய்திருக்கலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் 33 வயதான அவரது மகள் யூலியா, லண்டனில், பொது இடத்தில் மயங்கி கிடந்தனர். மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ரஷ்ய அரசுக்கு எதிரான பலர் மர்மமான சூழ்நிலைகளில் இறந்துகிடக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதால், இது அந்நாட்டு அரசு நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஸ்கிரிபால் தற்போது பிரிட்டன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று பேசியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்த கொலை முயற்சி ரஷ்ய அரசின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது போல உள்ளது என தெரிவித்துள்ளார். "அவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட ரசாயன பொருட்கள் ராணுவத்தின் வசம் உள்ளது போன்ற நவீனமானதாகவும். எனவே, இது ரஷ்ய அரசு நடத்தியது போல தான் தெரிகிறது. 

இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணமா அல்லது, ரஷ்ய அரசு இழந்த ரசாயன பொருட்களை வேறு யாரவது பயன்படுத்தினார்களா என்பது குறித்து ரஷ்ய தூதர் பதிலளிக்க வேண்டும். பதில் வராத பட்சத்தில், ரஷ்யா நடத்திய தாக்குதலாக இது பார்க்கப்படும்" என அறிக்கை வெளியிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close