ரஷ்ய அதிபர் பதவியை தக்க வைத்தார் புடின்!

  PADMA PRIYA   | Last Modified : 19 Mar, 2018 08:31 am

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. தேர்தல் களத்தில் புடினை எதிர்த்து 7 வேட்பாளர்கள் நின்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் 76 % ஓட்டுகள் பெற்று புடின் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் ரஷ்ய அதிபராக அடுத்த 6 ஆண்டுகள் பதவியில் அவர் நீடிப்பார். 

தேர்தல் வெற்றி தனது சாதனைகளுக்கான அங்கீகாரம் என புடின் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


சுயேச்சையாக போட்டியிட்ட அவருக்கு எதிர்ப்புகள் பல இருந்தாலும், புடினே மீண்டும் அதிபராவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close