போலந்தில் 1 கிமீ ஆழத்தில் சுரங்க விபத்து; 2 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 06:05 pm


போலந்தில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தின் உள்ளே பல தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், இருவர் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

போலந்து மற்றும் செக் குடியரசு எல்லைக்கு அருகே உள்ள ஜாஸ்த்ரஸ்பி என்ற ஊரில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுரங்கத்தினுள் பாறைகள் நிலைகுலைந்து விழுந்தன. இதில் சுமார் 900மீ ஆழத்தில் கீழே வேலைசெய்து வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கினார்கள். 

மொத்தம் 11 பேர் சிக்கியதாக பின்னர் தெரிய வந்தது. அதில் 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை காப்பாற்ற மீட்புப் படையினர் சுமார் 200 பேர் போராடி வந்தனர். பின்னர், மேலும் 2 பேர் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேரை தேடி வந்த மீட்பு குழுவினர், இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், சுரங்கத்தின் அருகே கண்ணீருடன் காத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முன்னதாக 3.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது. மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, மேலும் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது, பணிகளை தாமதப்படுத்தியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close