ரஷ்ய உளவாளி மற்றும் மகள் விஷம் வைத்து கொலை முயற்சி

  Sujatha   | Last Modified : 08 Mar, 2018 09:49 am


ரஷ்யாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரியும், அவரது மகளும் கடந்த ஞாயிறு அன்று, லண்டனில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலையில், இருவரையும் மோசமான விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயதான செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் யூலியா, லண்டன் சாலிஸ்பரியில், பொது இடத்தில் மயங்கி கிடந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரஷ்ய உளவாளியாக செயல்பட்டு வந்த ஸ்க்ரிபால் கடந்த 2006ம் ஆண்டு பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டார். 2010ம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அதிலிருந்து, அவர் பிரிட்டன் அரசுக்காக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அவர்கள் மீது இந்த மர்ம தாக்குதல் நடந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட விஷம், மிகவும் மோசமானது என்றும் அதை எந்த தனி நபராலும் தயாரித்திருக்க முடியாது என்றும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டின் அரசின் உதவியோடு மட்டுமே இதுபோன்ற விஷம் தயாரிக்கப் பட்டிருக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close