23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நீக்கம்: பிரிட்டன் அதிரடி

  SRK   | Last Modified : 14 Mar, 2018 11:06 pm


முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது பிரிட்டனில் வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சிக்கு ரஷ்ய அரசு தான் காரணம் என தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் ஓய்வுபெற்ற ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள், லண்டனில் பொது இடத்தில, ரசாயன தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு மயக்கமடைந்து கிடந்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த பிரிட்டன் அதிகாரிகள், நவீன ரசாயன விஷ பொருளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதி செய்தனர். இது ரஷ்ய அரசு நடத்திய தாக்குதலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார். இதுகுறித்து பதிலளிக்க ரஷ்ய அரசுக்கு தெரசா மே கால அவகாசம் கொடுத்தார்.

இந்நிலையில், ரஷ்யா எந்த பதிலும் அளிக்காததால், 23 ரஷ்யா தூதரக அதிகாரிகளை நீக்குவதாக மே அறிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close