சவுதி இளவரசிக்கு பிரான்ஸ் நீதிபதி பிடியாணை

  PADMA PRIYA   | Last Modified : 17 Mar, 2018 08:54 pm

வீட்டு வேலைப் பணியாளரை அடித்துத் துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சவுதி இளவரசிக்குப் பிரான்ஸ் நாட்டு நீதிபதி பிடியாணை விடுத்துள்ளார். 

பாரிஸில் உள்ள அவினியு பொச் தெருவில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சகோதரி இளவரசி ஹஸா பின்ற் சல்மானுக்குச் சொந்தமான வீடு உள்ளது. 18 மாதங்களுக்கு முன்பு அங்கு அவர் வந்திருந்தபோது பிளம்பிங் வேலைக்கு வந்த பணியாளர் ஒருவர் அந்த வீட்டைப் புகைப்படம் எடுத்துள்ளார். 

இதனால் கோபமடைந்த இளவரசி மற்ற பணியாளர்களை அழைத்துக் குறிப்பிட்ட பணியாளரைத் தாக்க உத்தரவிட்டுள்ளார். "இந்த நாய்க்கு வாழத் தகுதியில்லை. கொன்றுவிடுங்கள்" என்று உத்தரவிட்டு ஆயுதங்களால் தாக்க கூறியுள்ளார். மேலும், அந்த நபரை முழங்கால்படியிட வைத்து இளவரசியின் காலில் முத்தமிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த பணியாளர் 8 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஆஜராகும்படி இளவரசிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு பிடியாணை பிறப்பித்தார் நீதிபதி.

இதற்கிடையே, தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு சவுதி அரேபியாவுக்குச் சென்ற இளவரசியை தற்போதைய பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக பழிவாக்கும் நடவடிக்கையாக இளவரசி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால்தான் அவரால் பிரான்ஸ் திரும்ப முடியவில்லை என்று இளவரசிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close