'ஹிட்லர் போல புடின்' - பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி

  SRK   | Last Modified : 22 Mar, 2018 07:11 pm


பிரிட்டனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையே சமீபத்தில் எழுந்துள்ள கடும் சர்ச்சைக்கு நடுவே, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், ஹிட்லரையும் புடினையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவை, பிரிட்டனில் வைத்து சில மர்ம நபர்கள் ரசாயன விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்தனர். இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அரசு தான் காரணம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மிக மோசமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் இன்னும் சில மாதங்களில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கலந்து கொள்ளும் நிலையில், பிரிட்டன் ரசிகர்கள் பலர் ரஷ்யா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. தனது கருத்தை தெரிவித்த ஒரு பிரிட்டன் எதிர்கட்சி எம்.பி, ஹிட்லர் எப்படி 1936 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மூலம் தனது கொடூர ஆட்சியை மறைக்க பார்த்தாரோ, அதேபோல புடின் இந்த உலகக்கோப்பையை பயன்படுத்துவார் என கூறியிருந்தார். 

இந்த கருத்தை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனும் பிரதிபலித்தார். "ஹிட்லரை போல புடின் நிச்சயம், சர்வதேச அளவில் அவரது மோசமான செயல்களில் இருந்து நமது கவனத்தை திருப்ப முயற்சிப்பார்" என்றார் ஜான்சன். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.