பிணைய கைதிகளுக்காக உயிர்த் தியாகம் செய்த பிரான்ஸ் போலீஸ் அதிகாரி

  SRK   | Last Modified : 25 Mar, 2018 01:45 pm


சமீபத்தில் பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலில், பிணையக் கைதிக்கு பதில் தன் உயிரை தியாகம் செய்த போலீஸ் அதிகாரிக்காக நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலில், தீவிரவாதிகள் ஒரு சூப்பர்மார்க்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டு, சிலரை பிணையக் கைதிகளாக பிடித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் இறந்தனர். 16 பேர் காயமடைந்தனர். 

ஒரு பிணைய கைதியை விடுவிக்க, தீவிரவாதிகளிடம் சரணடைந்தார், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஆர்நாட் பெல்ட்ராமே. இவரது தியாகத்தால் ஆபத்தில் இருந்த ஒருவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பெல்ட்ராமேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றனர். 

அவரது இந்த தியாகம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவருக்காக பிரான்ஸ் நாட்டின் பல இடங்களில் இன்று தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டுள்ளது. 

"நடந்த சம்பவம் பற்றி நாங்கள் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியடைந்தோம். ஆனால், ஆச்சர்யப்படவில்லை. ஏனென்றால், அவர் இப்படிப்பட்டவர் தான். மற்றவர்களுக்காக தனது உயிரை தியாகம் செய்ய தயங்க மாட்டார்" என இறந்த பெல்ட்ராமேவின் சகோதரர் பிளாரன்ஸ் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close