7 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது நேட்டோ

  SRK   | Last Modified : 28 Mar, 2018 02:16 am


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கொண்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த ஆணையம் எனப்படும் நேட்டோ கூட்டணி, ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 7 பேரை வெளியேற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரிட்டனில் ஓய்வுபெற்ற ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது நடந்த ரசாயன விஷ தாக்குதலை தொடர்ந்து, சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை நடத்தியது ரஷ்ய அரசு தான் என குற்றம்சாட்டிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற்றினார்.

இதைத் தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகளும் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 64 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டார். 

இந்நிலையில், 7 தூதரக அதிகாரிகள் வெளியேற நேட்டோ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க், 7 தூதரக அதிகாரிகளை நீக்கியதோடு, மேலும் 3 பேர் நுழைவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார். நேட்டோவுக்கு ரஷ்யாவின் நிரந்தர தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 30ல் இருந்து 20ஆக குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close